வீட்டின் ஜன்னல் கதவை உடைத்து திருட முயற்சி

52பார்த்தது
வீட்டின் ஜன்னல் கதவை உடைத்து திருட முயற்சி
விருதுநகர் மாவட்டம்
சாத்தூர் சிதம்பரம் நகரை சேர்ந்தவர் ரமேஷ் ஆனந்த் (57), இவர் சடையம்பட்டியில் உள்ள தனியார் தீப்பெட்டி ஆலையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன் தினம் குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளனர். நேற்று காலை வெளியூர் சென்றிருந்த ரமேஸ் ஆனந்த் வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் ஜன்னல் கதவை உடைத்து வீட்டின் உள்ளே இருந்த இரண்டு பீரோக்களை உடைத்து உள்ளே
பார்த்துள்ளனர். அங்கு எதுவும் கிடைக்காததால் அங்கிருந்து மர்ம நபர்கள் சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து
ரமேஷ் ஆனந்த் சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி