விருதுநகர் மாவட்டம்
சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் திருவிழா சமாதன கூட்டம் சாத்தூர் கோட்டாட்சியர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது.
சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி கடை வெள்ளி திருவிழா ஆகஸ்ட் 16 ம் தேதி நடை பெறவுள்ளது. ஆடி கடைசி வெள்ளி திருவிழாவிற்கு விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், தென்காசி, சங்கரன்கோவில், புளியங்குடி, திருநெல்வேலி, தூத்துக்குடி , நாகர்கோவில் பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் தங்களின் வேண்டுதலை நிறைவேற்ற வருகை தருவார்கள். பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்ப்பில்
பாதுகாக்கபட்ட குடிநீர், கூடுதல் கழிப்பிடம், குளியல் அறை வசதிகள் செய்து கொடுப்பது, பக்தர்கள் வசதிக்காக இரண்டு இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைப்பது என்றும். கோவில் வளாகம், வைப்பாறு, அர்ஜுனா ஆற்று பகுதியில் பக்தர்கள் வசதிக்காக கூடுதல் மின் விளக்கு வசதிகள் செய்து கொடுப்பது மற்றும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்து. கூட்டத்தில் சாத்தூர் வருவாய் வட்டாட்சியர் லோகநாதன், சாத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், இருக்கன்குடி மாரியம்மன் கோவில் நிர்வாக அறங்காவலர் ராமமூர்த்தி பூசாரி, இருக்கன்குடி , நத்தத்துப்பட்டி, கே. மேட்டுப்படி ஊராட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.