விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், ஈஞ்சார் கிராம எல்லைக்குட்பட்ட சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் கடந்த 22. 01. 2025 அன்று உரிய அனுப்புகைச் சீட்டின்றி கனிமம் ஏற்றி வந்த TN 95 D 8988 என்ற பதிவெண் கொண்ட டிராக்டரானது சிவகாசி சார் ஆட்சியர் அவர்களால் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு, மல்லி காவல் நிலையத்தில் வழக்கு எண்: 19/2025 என பதிவு செய்யப்பட்டு, சம்பந்தபட்ட கனிம திருட்டில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், சட்ட விரோதமாக கனிமங்கள் வெட்டி எடுப்பது மற்றும் எடுத்துச்செல்வது சுரங்கங்களும் கனிமங்களும் (மேம்படுத்துதல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் சட்டம் 1957 பிரிவு 21(1)-ன்படி தண்டனைக்குறிய குற்றமாகும். மேலும், இச்செயல்கள் பாரதிய நியாய சன்ஹிதா 2023 பிரிவு 303(2)-ன்படி சம்பந்தப்பட்ட காவல் நிலையம் மூலம் வழக்கு பதிவு செய்யப்படும்.
மேலும், மணல் மற்றும் இதர கனிமங்கள் வெட்டி எடுப்பது மற்றும் எடுத்துச்செல்வது, அதைத் தடுக்க முற்படும் அரசு அலுவலர்களை அச்சுறுத்துவது போன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் உள்ளிட்ட குற்றவியல் சட்டங்கள் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.