ஊராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்

1856பார்த்தது
ஊராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்
சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் அலுவலகப் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்.

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஊராட்சி
ஒன்றிய அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
கடந்த சில தினங்களுக்கு முன்பு நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணி புரியும் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராஜேஸ்வரன் மற்றும் ஒன்றிய பொறியாளர் பிரேமா ஆகிய இருவரையும் மாவட்ட நிர்வாகம் தற்காலிக பணி இடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்து இருந்தது. இவர்கள் இருவரின் தற்காலிக பணி இடை நீக்க உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி கடந்த 19 மற்றும் 20ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் அதன் அடுத்த கட்ட போராட்டமாக இன்று வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள் அனைவரும் போராட்டத்தை வலுப்படுத்தும் வகையில் அலுவலகப் பணிகளைப் புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அலுவலகம் பணியாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலகப் பணிகள் அனைத்தும் இன்று முடங்கியது. மாவட்ட நிர்வாகம் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து இன்று நடைபெறும் உள்ளிருப்பு போராட்டம்அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்று போராட்டம் நடத்துவதாக அலுவலக பணியாளர்கள் தெரிவித்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி