விருதுநகர் மாவட்டம்
சாத்தூர் அருகே கே. சொக்கலிங்காபுரத்தில் அனைத்து சமுதாயத்தினரும் வசித்து வருகின்றனர். அங்கு அரசுக்கு சொந்தமான இடத்தில் அய்யனார், காளியம்மன் கோவில் உள்ளது. அங்கு ஆண்டு தோறும் அனைத்து சமுதாயத்தை சேர்ந்தவர்கள் சேர்ந்து பொங்கல் திருவிழா கொண்டாடுவது வழக்கம்.
கடந்து 2018 ஆம் ஆண்டு முதல் இரு பிரிவை சேர்ந்தவர்களுக்குள் பொங்கல் திருவிழா கொண்டாவதில்
பிரச்சினை ஏற்பட்டு கடந்த ஐந்து ஆண்டுகளாக பொங்கல் திருவிழா நடை பெறமால் கோவில் பூட்டியுள்ளது. இந்த நிலையில் மற்றொரு பிரிவினர் பொங்கல் திருவிழா நடத்துவதற்காக ஏற்பாடு செய்து இன்று கொடியேற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்து வந்துள்ளனர். இந்த நிலையில்
சாத்தூர் வட்டாட்சியரிடம் மற்றொரு சமூகத்தினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுக்கவே பொங்கல் திருவிழா சம்பந்தமாக சாத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் முன்னிலையில், வட்டாட்சியர் லோகநாதன் தலைமையில் தாலுகா அலுவலகத்தில் இருதரப்பினரையும் வைத்து சமாதான கூட்டம் நடந்தது. அதில் ஒரு பிரிவினர் நாங்கள் தனியாக தான் பொங்கல் திருவிழா கொண்டாடுவோம் என்று தெரிவித்ததால் கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த சமாதான கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு படி இருதரப்பினரும் பொங்கல் திருவிழா நடந்த வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டது.