விருதுநகர் மாவட்டம் சாத்தூர் எத்தல்ஹார்வி சாலையில் உள்ள அரசு மதுபான கடையில் உள்ள பாரில் இருக்கன்குடியை சேர்ந்த காந்திராஜன் (34) என்பவர் வேலை பார்த்து
வருகிறார். இன்று காலை 11 மணியளவில் வேலைக்கு வந்தவர் கடையின் வாசலில் நின்றிருந்த போது அங்கு வந்த மர்ம நபர்கள் இருவர் தங்கள் கையில் வைத்திருந்த கத்தியால் காந்திராஜன் கழுத்தை அறுத்து விட்டு தப்பி சென்றனர். கழுத்து அறுபட்டு ரத்தம் அதிகளவில் வெளியேறவே மயக்கமடைந்து கீழை விழுந்தவரை அப்பகுதியினர் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம்
சாத்தூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருந்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சாத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து நத்தத்துப்பட்டியை சேர்ந்த இருவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.