சாத்தூர்: தொடர் மாயமாகும் பேட்டரிகள்...சிக்கிய...!

6113பார்த்தது
சாத்தூர்: தொடர் மாயமாகும் பேட்டரிகள்...சிக்கிய...!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் ஆட்டோ வேன்களில் பேட்டரியை திருடி சென்ற நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சாத்தூர் பகுதியில் இரவு நேரத்தில் வீட்டின் அருகே நிறுத்தியிருந்த ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களில் உள்ள பேட்டரிகள் தொடர்ந்து மாயமாகி வந்தது. இந்த திருட்டில் ஈடுபடும் மர்ம நபர்களை சாத்தூர் நகர் பகுதி மற்றும் திருடு நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை வைத்து சாத்தூர் நகர் போலீசார் தேடிவந்தனர்.

இந்த நிலையில் சாத்தூர் அண்ணாநகர் பகதியில் இருக்கும் பழைய இரும்பு வாங்கி விற்பனை செய்யும் கடையில் திருடிய பேட்டரிகளை விற்பனை செய்ய வந்த கோவில்பட்டியை சேர்ந்த மாரிமுத்து என்ற சங்கர்(29), அம்மாபட்டியை சேர்ந்த பாலமுருகன் (18), குருலிங்காபுரத்தை சேர்ந்த மகாராஜன் (22), முத்துராமலிங்கபுரத்தை சேர்ந்த சந்தனராஜ் (29), ஆகியோரை பிடித்து சாத்தூர் நகர் போலீசார் விசாரணை செய்ததில் கடந்த மூன்று மாதங்களாக சாத்தூர் கோவில்பட்டி பகுதியில் உள்ள இருசக்கர வாகனங்கள், ஆட்டோ , கார்களில் உள்ள பேட்டரி திருடி விற்பனை செய்து வந்தது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி