விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அப்துல் காதர் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் இருந்த போது சாத்தூர் அருகே அழகாபுரி கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலையின் அருகே தகரத்தில் செட்டு அமைத்து
பட்டாசுகள் தயார் செய்த இரவார்பட்டியை சேர்ந்த அண்ணாதுரை (51), மனோவா (43), சூரங்குடியை சேர்ந்த சதீஸ்குமார் (19) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.