ராஜபாளையம் நகராட்சி பகுதியில் குடிநீர் தேவையை கருத்திற்கொண்டு கோடை காலத்தின் தண்ணீர் வரத்தை கண்காணிக்க அய்யனார் கோவில் மலையின் நீர் பிடிப்பு நிலைகளை நகர்மன்ற தலைவி AAS பவித்ரா ஷியாம் பார்வையிட்டார். பின்னர்
ஆறாவது மைலில் அமைந்துள்ள குடிநீர் சுத்திகரிப்பு தொட்டியினையும் அதன் பராமரிப்பையும் ஆய்வு செய்தார்கள். இந்த ஆய்வுப்பணியில் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அதிகாரிகள் மற்றும் பராமரிப்பு ஊழியர்கள் உடனிருந்தார்கள்.