தமிழகத்தில் தற்போது போதைப்பொருட்களான கஞ்சா, புகையிலை , மதுவகைகளை அதிகளவில் பள்ளி கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் பயன்படுத்தி வருகின்றனர். காவல் துறையினருக்கு கிடைக்கும் ரகசிய தகவலில் பெயரளவில் நடவடிக்கை எடுத்து
கைப்பற்றப்படும் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யது வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் சாத்தூர் நகர் பகுதிகளிலும் நகரை ஒட்டியே உள்ள வெங்கடாசலபுரம், மேட்டமலையில்
முள்ளிசெவல் ஆகிய பதுதியில் கஞ்சா விற்பனை படு ஜோராக நடைபெற்று வருவதாகவும். கஞ்சா வியாபாரிகள் வாட்சப் குழுகள் அமைத்துள்ளனர். கஞ்சா தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கு
வீடுகளுக்கு கஞ்சா விநியோகம் செய்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர். காவல் துறையினர் வாட்சப் குழு அமைத்து கஞ்சா விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்