அனுமதி இன்றி வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்கள் அகற்றம்

64பார்த்தது
அனுமதி இன்றி வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்கள் அகற்றம்
அருப்புக்கோட்டையில் மதுரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் உரிய அனுமதி இன்றி வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்கள் அகற்றம்; நகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் நடவடிக்கை.

அருப்புக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உரிய அனுமதி இன்றி பல இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் நகராட்சி பொது சுகாதார பிரிவு, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், நகர தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் நகராட்சி ஆணையாளர் உத்தரவுபடி, நகராட்சி சுகாதார அலுவலர் தலைமையில் சுகாதார துறை அதிகாரிகள் மதுரை சாலை, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் அனுமதி இன்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்களை அகற்றினர். இதில் சுகாதார ஆய்வாளர் , துப்புரவு மேற்பார்வையாளர், மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பணிபுரியும் மேற்பார்வையாளர்கள், பரப்புரையாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி