இராஜபாளையம்: நள்ளிரவு வெளுத்து வாங்கிய மழை..

74பார்த்தது
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று (டிசம்பர் 22) காலை முதல் வெயில் அடித்த நிலையில் மாலை நேரத்தில் மிதமான குளிர்ந்த காற்று வீசியது. மேலும் நள்ளிரவு இடி, மின்னல், பலத்த காற்றுடன் விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது. 

இந்நிலையில் நள்ளிரவு இராஜபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இராஜபாளையம், புது, பழைய பேருந்து நிலையம், முகவூர், ஹவுசிங் போர்டு, சத்திரப்பட்டி ரோடு, தேசிகாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நள்ளிரவு நேரத்திற்கு மேலாக கனமழை பெய்து வந்தது. நள்ளிரவு பெய்த கனமழை காரணமாக மதுரை, விருதுநகர், தென்காசி சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீரோடு கலந்து சாக்கடை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளில் மழை நீரோடு கலந்து சாக்கடை நீர் ஓடுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்துள்ளனர். இரவு நேரத்தில் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

தொடர்புடைய செய்தி