இராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்தில் நடந்த செயலால் மக்கள் அச்சம். துக்க நிகழ்வுக்கு வந்த நபர் கடக்க முடியாமல் ஆங்காங்கே தடுமாறி விழுந்தது பார்ப்போரை முகம் சுளிக்க செய்த செயல்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே உள்ள மலையடிப்பட்டியில் நிகழ்ந்த துக்க நிகழ்வுக்காக வத்திராயிருப்பை சேர்ந்த சுந்தரமகாலிங்கம் குடிபோதையில் வந்துள்ளார். கையில் மாலையுடன் தள்ளாடியபடி பேருந்தில் இருந்து இறங்கி வந்த அவர் பேருந்து நிலையத்தின் வெளியே நிலைகுலைந்து கீழே விழுந்தார்.
தனியார் பேருந்துகள் நிறுத்தும் இடத்தில் அவர் எழுந்திருக்க முடியாமல் கிடந்ததை கண்ட பேருந்து ஓட்டுநர்கள் சற்று தள்ளி பேருந்தை நிறுத்தி பயணிகளை இறக்கிவிட்டு சென்றனர். சுமார் அரை மணி நேரமாகியும் கீழே விழுந்தவரால் எழுந்திருக்க முடியவில்லை.
இதனைக் கண்ட ஆட்டோ ஓட்டுநர்கள் அவருக்கு உதவி செய்ய இயன்ற போது தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் ஆட்டோ ஓட்டுநர்களும் அங்கிருந்து அகன்றனர்.
மேலும் விபத்தை தடுக்க மற்ற சில ஆட்டோ ஓட்டுநர்கள் அவரை கை தாங்கலாக பிடித்து சுவர்ஓரம் நிறுத்திச் சென்றனர். ஆனால் அவர் வாய்க்கு வந்த படி சரளமான அவதூறு வார்த்தைகளை கொட்டியபடி அந்த இடத்தில் இருந்து நகர முடியாமல் கொக்கி போல் வளைந்த வண்ணம் நின்றிருந்தார். இதனை கண்ட அந்த வழியாகச் சென்ற மாணவ மாணவிகள் பெண்கள் முகம் சுளித்தபடி தலையில் அடித்துச் சென்றனர்.