இராஜபாளையம்: கஞ்சா விற்பனை செய்த 2 இளைஞர்கள் கைது

65பார்த்தது
இராஜபாளையம் அருகே கஞ்சா விற்பனை செய்த 2 இளைஞர்கள் கைது. 50 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல். 

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே முகவூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளி அருகே வைத்து இருசக்கர வாகனம் மூலம் இளைஞர்கள் கஞ்சா விற்பனை செய்து வருவதாக தளவாய்புரம் போலீசாருக்கு தகவல் வந்தது. மேற்படி தகவலின் பேரில் சிறப்பு சார்பு ஆய்வாளர் செல்வம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர். 

இந்த ஆய்வில் முகவூர் பகுதியை சேர்ந்த நருப்பசாமி (23), மாணிக்கம் (20), ஆகிய இளைஞர்கள் இருசக்கர வாகனம் மூலம் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. மேலும் அவர்களிடமிருந்து 50 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி