இராஜபாளையம் காவல் நிலையத்தில் அத்து மீறல். மது போதையில் பெண் போலீசிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட
சிறப்பு எஸ். ஐ அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றம்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகேயுள்ள தொம்பக்குளத்தை சேர்ந்தவர் மோகன் ராஜ் (54) போலீஸாக பணியாற்றி வந்த அவர் சமீபத்தில் சிறப்பு சார்- ஆய்வாளராக பதவி உயர்வு பெற்று இராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் பணி ஆற்றி வருகிறார். தற்போது இராஜபாளையம் மலையடிப்பட்டி காவலர் குடியிருப்பில் வசித்து வரும் இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன். ஒரு மகள் உள்ளனர். மது அருந்து பழக்கம் கொண்ட மோகன்ராஜ், காவல் நிலையத்தில் இரவு பணியிலிருந்த பெண் காவலரிடம் ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் ரீதியாக அத்து மீறலில் ஈடுபட்டு உள்ளார். அப்போது மது போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட எஸ்பி மோகன்ராஜை உடனடியாக ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். மேலும் இதுகுறித்து முதல் கட்டமாக
துறை ரீதியாக விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது, இச்சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.