இராஜ: தொடர் மழையால் அருவியில் குளிக்க தடை வனத்துறை...

73பார்த்தது
இராஜபாளையம், திருவில்லிபுத்தூர் பகுதிகளில் பரவலாக மழை. அருவி, நீரோடைகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் மற்றும் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று முதல் பரவலாக பலத்த மழை பெய்தது. இன்று காலையிலிருந்தும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் இராஜபாளையம் அய்யனார் கோவில் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், திருவில்லிபுத்தூர் காட்டழகர் கோவில் மலைப் பகுதியில் உள்ள அருவி மற்றும் நீரோடைகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள நீரோடைகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தொடர்ந்து மலைப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் அருவிகள் மற்றும் நீரோடைகளில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் பொது மக்கள் யாரும் அருவி மற்றும் நீரோடைகளுக்குச் செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி