ராஜபாளையம் அருகே பொது மக்கள் நாத்து நடு போராட்டம்

891பார்த்தது
ராஜபாளையம் அருகே உள்ள முத்துசாமிபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட 1, 2 வது வார்டுகளை சேர்ந்தது காமராஜர் நகர். மக்கள் அதிகமாக வசித்து வரும் இப் பகுதியில் கடந்த 20 வருடங்களாக அடிப்படை வசதிகள் முழுமையாக செய்து தரப்படவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.
குறிப்பாக பிள்ளையார் கோயில் தெருவில் இது வரை கழிவுநீர் கால்வாய், சாலை வசதி செய்து தரப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் தெருவின் மையத்தில் செல்கிறது. மழை நேரத்தில் கழிவுநீருடன், மழை நீரும் கலந்து விடுவதால் தெரு முழுவதும் சகதியாக மாறி விடும். அப்போது தெருவில் நடக்க கூட முடியாத நிலை ஏற்படுவதாக மக்கள் தெரிவித்தனர். மீறி நடந்தால் சாக்கடை கழிவுகளில் அடிக்கடி தவறி விழும் அவல நிலை ஏற்படும் எனவும் மக்கள் வேதனை தெரிவித்தனர். கழிவுகள் வெளியேற வழியின்றி வீடுகளை சுற்றிலும் நாள் கணக்கில் தேங்கி இருப்பதால் ஏற்படும் சுகாதார சீர்கேடு காரணமாக கைக் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அடிக்கடி நோய் வாய் படுவதாகவும், காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் நிலை ஏற்படுவதாகவும் மக்கள் தெரிவித்தனர். இது குறித்து பல முறை ஊராட்சி அலுவலகத்தில் மனு அளித்தும் இது வரை எந்த நடவடிக்கையும்
எடுக்கப்படவில்லை எனக்கூறி தெருக்களில் தேங்கியிருந்த கழிவு நீர் மற்றும் சாக்கடையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி