ராஜபாளையம் வடக்கு காவல்துறையினர் பழைய பேருந்து நிலையம் அருகே நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது சர்ச் தெரு பகுதியைச் சார்ந்த வேல்முருகன் என்பவரை சோதனை செய்தபோது அவர் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக 20 கிராம் கஞ்சா பறிமுதல் செய்து வடக்கு காவல்துறையினர் வேல்முருகன் என்பவரை கைது செய்தனர்.