சிஐடியு கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

57பார்த்தது
ராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் வைத்து சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் மத்திய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம். சிஐடியு மாவட்ட துணை தலைவர் கணேசன் தலைமையில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். தொழிலாளர் சட்ட தொகுதிகளை கிழித்தெறிய வேண்டும்அக்னிவீர் ஆயுத்வீர் கொய்லா வீர் போன்ற குறிப்பிட்ட கால அளவிற்கான வேலை வாய்ப்பு திட்டங்களை கைவிட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கோஷம் போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிஐடியு மாவட்ட துணை தலைவர் கணேசன் தலைமையில் நடைபெற்ற இப் போராட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் தேவா சிறப்புரை ஆற்றினார். மாவட்ட உதவி தலைவர்கள் திருமலை சோமசுந்தரம் ஆர் எம் மாரியப்பன் உட்பட சிஐடியு தொழிற்சங்கத்தை சேர்ந்த பல்வேறு நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷம் போட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி