ராஜபாளையம் அருகே லாரிகளை சிறை பிடித்த பொதுமக்கள்‌

573பார்த்தது
ராஜபாளையம் அருகே லாரிகளை சிறை பிடித்த பொதுமக்கள்‌
ராஜபாளையம் மாடசாமி கோவில் தெரு அடுத்து அயோத்தி ராம் நகரில் 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து
வருகின்றனர். ஆறுமாதங்களுக்கு முன் ரூ. 10 லட்சம் செலவில் ஊராட்சி ஒன்றிய பொது நிதி மூலம் புதிய தார் சாலை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் குடியிருப்பு அருகே பிளாட்டுகளுக்கு மண் கொண்டு செல்கிறோம் என்ற பெயரில் கனரக லாரிகளில் அளவுக்கு அதிகமாக கொண்டு சென்ற மண் எடை தாங்காமல் ரோடு சேதம் அடைந்தது. இதையடுத்து அப்பகுதி குடியிருப்பு வாசிகள் 3 டாரஸ் லாரி இரண்டு மண் அள்ளும் இயந்திரங்களை சிறை பிடித்தனர். வடக்கு போலீசார் நீண்ட பேச்சு வார்த்தைக்கு பின் லாரிகளை விடுவித்தனர்.

ரமேஷ் குடியிருப்பு சங்க நிர்வாகி10 ஆண்டுகள் போராட்டத்திற்கு பின் தார் சாலை பெற்று உள்ளோம். இதன் அடுத்த பகுதியில் இதே காரணம் கூறி ரோட்டை பாழாக்கி விட்டனர். ஊராட்சி நிர்வாகத்திடம் பராமரிக்க கேட்டால் எங்கள் பொறுப்பில்லை என்கின்றனர். ரியல் எஸ்டேட் இடைத்தரகர்களின் பேராசைக்கு புதிய ரோடு சிதிலமடைந்துவிட்டது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி