விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வட்டம், திருவில்லிபுத்தூர் யூனியன் கொத்தங்குளம் ஊராட்சி அழகாபுரி கிராமத்தில் தொடர்ச்சியாக பல மாதங்களாக வாருகால் சுத்தம் செய்யப்படாமல் கழிவு நீர் வடிகாலில் அடைத்து அங்கங்கே தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல் எப்போதும் வீசும் காற்றில் கெட்ட வாசனையும் சேர்ந்து வருகிறது என்று அந்த மக்கள் புகார் தெரிவித்துள்ளார்கள். இது பற்றி பலமுறை ஊராட்சி செயலாளரிடம் தெரிவித்தும் கண்டுகொள்ளாமல் இருப்பதாக கூறப்படுகிறது.