ராஜபாளையம் அருகே வைக்கோல் படப்புக்கு தீ வைப்பு

567பார்த்தது
ராஜபாளையம் எம். பி. கே புதுப்பட்டி பகுதியைச் சார்ந்தவர் கோவிந்தராஜ். இவர்அதே பகுதியில் மாடுகளுக்கு தேவையான இரண்டு வைக்கோல் படப்புகள் வைத்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியைச் சார்ந்த சிறுவர்கள் மதியம் வைக்கோல் படப்பிற்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். ஆனால் ரூபாய் 20 ஆயிரம் மதிப்புடைய வைக்கோல் படப்புதீயில் எரிந்து சேதமானது. இது தொடர்பாக உரிமையாளர் கோவிந்தராஜ் கொடுத்த புகார் அடிப்படையில் வடக்கு காவல்துறையினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி