விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வட்டம் சம்சிகாபுரம் ஊராட்சி சிவகாமியாபுரம் கிராமத்தில் கடந்த 10 நாட்களாக தண்ணீர் வரவில்லை என்று மக்கள் ஊராட்சி அலுவலகத்திற்கு முறையிடச் சென்றார்கள். அங்கே அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு, மக்களிடம் அவர் தொலைபேசியில் இன்று மாலைக்குள் தண்ணீர் வந்துவிடும் என்று உறுதி அளித்ததன் பேரில் மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.