அருப்புக்கோட்டை: விளையாட்டு மேம்பாட்டு அணி உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை

85பார்த்தது
அருப்புக்கோட்டையில் அதிமுக இளம் தலைமுறை விளையாட்டு மேம்பாட்டு அணி உறுப்பினர் சேர்க்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்கே ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் விருதுநகர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட சாத்தூர், அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் நகர ஒன்றிய பேரூர் கழகங்களில் இளம் தலைமுறை விளையாட்டு மேம்பாட்டு அணி உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி பாக செயலாளர் மற்றும் கழக வளர்ச்சி பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்கே ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. 

இதில் பூத் கமிட்டி மாவட்ட பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் வி. ஜி பாஸ்கரன் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். மேலும் இளம் தலைமுறை விளையாட்டு மேம்பாட்டு அணி உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பாக உரிய வழிகாட்டுதல் வழங்கினார். பின்னர் விளையாட்டு மேம்பாட்டு அணி உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பான விண்ணப்பப் படிவங்களை நிர்வாகிகளுக்கு வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எம். எஸ். ஆர் ராஜவர்மன், எஸ். ஜி. சுப்பிரமணியன், மணிமேகலை, கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ஆர். ஜி விமல் குருசாமி உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி