எக்ஸ்ரேடெக்னீசியனை துப்புரவு பணியாளர்கள் தாக்கியதால்பரபரப்பு

50பார்த்தது
*அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் செருப்பு அணிந்து கொண்டு எக்ஸ்ரே ரூமுக்குள் வரக்கூடாது என கூறியதால் ஏற்பட்ட பிரச்சனையில் எக்ஸ்ரே டெக்னீசியனை துப்புரவு பணியாளர்கள் சேர்ந்து தாக்கியதால் பரபரப்பு*

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே டெக்னீசியனாக பணிபுரிந்து வருபவர் ராஜ். இந்நிலையில் இன்று அரசு மருத்துவமனை துப்புரவு பணியாளர் உமா மகேஸ்வரி என்பவர் எக்ஸ்ரே ரூமுக்கு செருப்பு அணிந்து சென்றதாகவும் அதற்கு எக்ஸ்ரே டெக்னீசியன் ராஜ் செருப்பு அணிந்து உள்ளே வரக்கூடாது என கூறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் உமா மகேஸ்வரியை,
ராஜ் செருப்பு அணிந்து வரக்கூடாது என சத்தம் போட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த துப்புரவு பணியாளர்கள் ஒன்று கூடி எக்ஸ்ரே டெக்னீசியன் ராஜை தாக்கியுள்ளனர். மருத்துவமனை பணியாளர்கள் விரைந்து வந்து உடனடியாக தாக்குதலை விலக்கினர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி