மகளிர் குழுவில் அதிக அளவில் கடன் பெற்ற நபர் திருப்பி செலுத்த முடியாமல் தற்கொலை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பாளையம்பட்டி பகுதியைச் சார்ந்தவர் வினிதா வயது 29 இவருடைய கணவர் லிங்கராஜ் வினிதா கணவருக்கு தெரியாமல் மகளிர் குழுவில் கடன் பெற்றதாகவும் தனக்கு தெரிந்த நபர்களுக்கு கடன் பெற்றுக் கொடுத்ததாக கூறப்படுகிறது கடன் பெற்று கொடுத்த நபர்கள் திரும்ப செலுத்தாத காரணத்தினால் அதிக கடன் சுமையால் வினிதா அவதிப்பட்டு வந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் இந்த சம்பவம் குறித்து வினிதா கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்