விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாலவனத்தம் பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் உமாதேவி இவர் பணிபுரியும் பள்ளி ஏழு கட்டிடங்கள் அமைந்துள்ளதாகவும் கடந்த 21ஆம் தேதி மாலை 6 மணி அளவில் பள்ளியை பூட்டிவிட்டு சென்று மறுநாள் 23ஆம் தேதி காலை 8 மணி அளவில் ஓவிய ஆசிரியர் பள்ளி திறந்து பார்த்தபொழுது பள்ளியில் இருந்த வயர் திருடு போயிருப்பது தெரிய வந்தது இது குறித்து தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு வந்து பார்த்த தலைமை ஆசிரியர் ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு கட்டிடத்திற்கு செல்லும் த்ரீ பேஸ் பவர் லைனில் 720 காப்பர் வயர் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது அதன் மதிப்பு சுமார் 18000 இருக்கும் எனவும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி தலைமை ஆசிரியர் அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகார் அடிப்படையில் தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்