அருப்புக்கோட்டை அருகே லாரி மோதி வாட்ச்மேன் படுகாயம்

64பார்த்தது
தூத்துக்குடி வடக்கு முத்தையாபுரத்தை சேர்ந்தவர் அருண்குமார்(26). அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி ராம்கோ கம்பெனியில் வாட்ச்மேன் வேலை செய்து வருகிறார். ‌ இந்நிலையில் அருண்குமார் வேலைக்கு செல்வதற்காக பந்தல்குடி ராம்கோ செக்போஸ்ட் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த போது திடீரென குறுக்கே வந்த லாரி மோதி அருண்குமார் படுகாயம் அடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். விபத்து குறித்து பந்தல்குடி போலீசார் நேற்று ஜூன் 7 லாரி ஓட்டுனர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி