விருதுநகர்: பேரணியுடன் துவங்கிய மாநாடு...

81பார்த்தது
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அடுத்த திருச்சுழியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சுழி, நரிக்குடி ஒன்றிய 25 வது மாநாடு கம்யூனிஸ்ட் கட்சியினரின் பேரணி நடைப்பெற்றன. திருச்சுழி பகுதியில் ஜூன். 11 இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சுழி, நரிக்குடி ஒன்றிய 25-வது மாநாடு நடைபெற்றது. இந்த மாநாடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரின் பேரணியுடன் துவங்கியது இந்த பேரணி ஆத்துப்பாலத்தில் இருந்து துவங்கி, பஜார் பகுதி வழியாக பூமிநாதர் கோவில் வரை சென்று நிறைவுற்றது. அதனைத் தொடர்ந்து பூமிநாதர் கோவில் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சுழி, நரிக்குடி ஒன்றிய 25 வது மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் முன்னாள் எம்பி லிங்கம் மற்றும் முன்னாள் எம்எல்ஏ ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இந்த மாநாட்டில் திருச்சுழி, நரிக்குடி ஒன்றிய பகுதிகளில் மழை வெள்ளம் மற்றும் வளர்ச்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம், இன்சூரன்ஸ் தொகை வழங்க வேண்டும், திருச்சுழி காட்டுநாயக்கர் சமுதாய மாணவ, மாணவியர்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும், அனைத்து அரசு மருத்துவமனைகளும் சிடி ஸ்கேன் அமைக்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூ 5000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்
பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி