விருதுநகர்: புரவி எடுப்பு திருவிழா..திரளான பக்தர்கள் பங்கேற்பு

75பார்த்தது
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே கோலாலமாக நடைபெற்ற புரவி எடுப்பு திருவிழா. பெண்கள் கும்மியடித்து உற்சாகமாக நடமாடிய நிகழ்வு காண்போரின் கவனத்தை ஈர்த்தது. அருப்புக்கோட்டை அருகே வக்கனாங்குண்டு கிராமத்தில் வீற்றிருக்கும் அய்யனார், காளியம்மன் கோவில் வைகாசி பொங்கல் விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அம்மனுக்கு பல்வேறு நேர்த்திக்கடன்கள் செலுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் நேற்று ஜூன் 8 இரவு முக்கிய நிகழ்வான புரவி எடுப்பு நிகழ்வு நடைபெற்றது. கிராமத்திலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கருப்பசாமி கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க புரவி எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக சென்று தங்களது நேர்த்திக்கடன்கள் செலுத்தினர். புரவி எடுப்பு திருவிழாவின் போது ஏராளமான பக்தர்கள் ஆடிப்பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனை தொடர்ந்து பெண் பக்தர்களின் கும்மியாட்ட நடனம் கிராம மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்தி