விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அடுத்த காரியாபட்டி அருகே கல்விமடை கிராமத்தில் 30க்கும் மேற்பட்டோருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டு அ. முக்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மதுரை அரசு மருத்துவமனை, மானாமதுரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமத்தித்து தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காரியாபட்டி அருகே கல்விமடை கிராமத்தில் சிறுவர் சிறுமியர்கள் உள்ளிட்ட சுமார் 30க்கும் மேற்பட்டோருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. வாந்தி மயக்கம் ஏற்பட்ட அனைவரும் அருகில் உள்ள அ. முக்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மதுரை அரசு மருத்துவமனை, மானாமதுரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜூன்-8 நேற்று முன்தினம் இரவு கிராமத்தில் நடந்த கும்பாபிஷேக விழாவில் வெளியே வாங்கி விநோயோகிக்கப்பட்ட குடிநீரை பருகியதா, அல்லது நேற்று ஜூன் 9 கிராமத்தில் விற்பனை செய்யப்பட்ட மீனை அதிகளவிலான மக்கள் வாங்கி சமைத்த நிலையில் அதன் காரணமாக உடல் உபாதை ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போது அந்த கிராமத்தில் சுகாதாரத்துறை மூலம் மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் எதனால் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்தும் மருத்துவ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.