விருதுநகர்: பட்டாசு ஆலை வெடிவிபத்து. 3 பேர் மீது வழக்கு பதிவு.

57பார்த்தது
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டைஅடுத்த காரியாபட்டி அருகே ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்த சோகம். காரியாபட்டி அருகே, வடகரை கிராமத்தில் ராஜா சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமான யுவராஜ் பட்டாசு ஆலையில் இன்று வழக்கம்போல் 175 பேர் வேலை செய்து வந்தனர். பேன்சி ராக பட்டாசுகள் தயாரிக்கும் பணியின் போது எதிர்பாராத விதமாக வெடி விபத்து திடீரென வெடி விபத்து ஏற்பட்டதில் அங்கிருந்த 3 பட்டாசு தயாரிப்பு அறைகள் இடிந்து சேதமானது. சம்பவம் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். வெடி விபத்தில் தண்டியனேந்தலை சேர்ந்த கருப்பையா (38), பேச்சியம்மாள் (40), கல்குறிச்சியை சேர்ந்த செளன்டம்மாள் (54) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும்
கணேசன் (50) செல்லப்பன் (45) உள்ளிட்ட 3 பேர் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்தில் அருப்புக்கோட்டை உதவி காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் ஆய்வு நடத்தினார். விபத்து குறித்து 3 மீது வழக்கு பதிவு செய்துள்ள காரியாபட்டி போலீசார், ஆலையின் போர்மேன் வீர சேகரன், மேற்பார்வையாளர் கனி முருகன் ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஆலை உரிமையாளர் ராஜா சந்திரசேகரை போலீசார் தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி