விருதுநகர்: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு...

68பார்த்தது
விருதுநகர் மாவட்டம்,
அருப்புக்கோட்டையை அடுத்த காரியாபட்டி அருகே ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்த சோகம்.
காரியாபட்டி அருகே, வடகரை கிராமத்தில் ராஜா சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமான யுவராஜ் பட்டாசு ஆலையில் இன்று வழக்கம் போல் 175 பேர் வேலை செய்து வந்தனர். பேன்சி ராக பட்டாசுகள் தயாரிக்கும் பணியின் போது எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 3 பட்டாசு தயாரிப்பு அறைகள் இடிந்து சேதமானது. இந்த வெடி விபத்தில் கருப்பையா (38), பேச்சியம்மாள் (40), செளன்டம்மாள் (54) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும்
கணேசன் (50) செல்லப்பன் (45) உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர். தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் இரங்கல் செய்தி குறிப்பில் கூறியது: -பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினரும் ஆழ்ந்த இரங்கலையும், படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார். மேலும் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ 4 லட்ச ரூபாயும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ 1 லட்ச ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு
ரூ 50 ஆயிரமும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி