குடியிருப்பு பகுதிகளில் படையெடுக்கும் பாம்புகள் வைரல் வீடியோ

64பார்த்தது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர் பகுதியில் அமைந்துள்ளது சிவன் கோவில் தெரு இந்த பகுதியில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர் தினமும் இப்பகுதியில் பள்ளி குழந்தைகள் வேலைக்கு செல்வோர் என 100க்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர்

இந்நிலையில் அந்த தெருவில் கடந்த இரண்டு வருடங்களாக பூட்டி இருந்த வீட்டில் அந்த பகுதியில் பாம்பு சுற்றி திரிவதக கூறி அந்த பகுதி பொதுமக்கள் பாம்பாட்டிகளுக்கு தகவல் அளித்ததன் பேரில் பாம்பாட்டிகள் வந்து பூட்டி இருந்த அந்த வீட்டில் 10க்கும் மேற்பட்ட நல்ல பாம்புகள் சாரைப் பாம்புகளை பிடித்து சென்றனர் குடியிருப்பு பகுதிகளில் பாம்புகள் படை எடுத்திருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
பாம்பு பிடிக்கும் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி