அருப்புக்கோட்டையில் அதிக வாக்குகள் பெற்ற விஜய பிரபாகரன்

60பார்த்தது
அருப்புக்கோட்டையில் அதிக வாக்குகள் பெற்ற விஜய பிரபாகரன்
விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் நேற்று குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்நிலையில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் உள்ள அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் விஜய பிரபாகரன் அதிக வாக்குகள் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் விஜய பிரபாகரன் 61, 659 வாக்குகளும், மாணிக்கம் தாகூர் 49, 381 வாக்குகளும் ராதிகா சரத்குமார் 23, 673 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதேபோல திருமங்கலம் தொகுதியிலும் மாணிக்கம் தாகூரை விட விஜய பிரபாகரன் அதிக வாக்குகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி