ஒட்டு மொத்த தூய்மை பணி மற்றும் உறுதிமொழி ஏற்பு

72பார்த்தது
ஒட்டு மொத்த தூய்மை பணி மற்றும் உறுதிமொழி ஏற்பு
அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் இன்று ஜூன் 8 நகராட்சி நகர தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் சொக்கலிங்கபுரம் சொக்கநாதர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஒட்டுமொத்த தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் தூய்மை பணியாளர்கள் சொக்கலிங்கபுரம் பகுதி முழுவதும் ஒட்டுமொத்தமாக தூய்மை பணி மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து நகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் பொதுமக்கள் இணைந்து அருப்புக்கோட்டை நகராட்சியை தூய்மையான நகராட்சியாக வைக்க பாடுபடுவோம் என தூய்மை இந்தியா திட்ட உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

தொடர்புடைய செய்தி