கத்தியை காட்டி மிரட்டி செல்போன் வழிப்பறி

57பார்த்தது
அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி நெடுங்கரை பட்டியைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார்(45). இந்நிலையில் நேற்று ஜுலை 31 ஆனந்தகுமார் அருப்புக்கோட்டை ஜீவா லாட்ஜ் பின்புறம் உள்ள சாலையில் நடந்த சென்று கொண்டிருக்கும்போது, அவரை வழிமறித்த மர்ம நபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி ஆனந்த குமாரின் செல்போனை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து ஆனந்தகுமார் புகாரின் பேரில் டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். அருப்புக்கோட்டையில் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருவதால் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ‌

தொடர்புடைய செய்தி