அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய பெண்

76பார்த்தது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் பாலவனத்தம் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. அதே சமயம் மாநில வருவாய்த்துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர் இராமச்சந்திரன் தலைமையில் 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாளர்களுக்கு பாக்கியுள்ள சம்பளம் நிலைவை தொகையை விடுவிக்ககோரி ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் இடையில் மீனா என்ற பெண்மணி எழுந்து அமைச்சரிடம் நேரடியாக கிராமசபைக்கூட்டம் நடக்கும் இடத்தில் எதர்க்காக ஆர்ப்பாட்டம் நடத்துகிறீர்கள், மக்களை ஏன் திசை திருப்புகிறீர்கள், மத்திய அரசு 36 ஆயிரம் கோடி தமிழகத்திற்கு ஒதுக்கியுள்ளதே, பொதுமக்களாகிய எனது கேள்விக்கு அமைச்சராகிய நீங்கள் பதில் சொல்லவேண்டும், விருதுநகர் மாவட்டத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தில் ஊழல் நடந்துள்ளது. அதற்கான புகார் கொடுக்கப்பட்டுள்ளது. புகாரை விசாரித்தபின் சம்பளம் சம்பளம் வழங்குவார்கள். அதற்குள் மத்திய அரசை குறைகூறி ஒரு அமைச்சரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடலாமா என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார். இதை சற்றும் எதிர்பாராத அமைச்சர் ஆர்ப்பாட்டத்தை பாதியிலேயே முடித்து கிளம்பினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி