அருப்புக்கோட்டை அருகே செட்டிக்குறிச்சியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை வருவாய் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
அருப்புக்கோட்டை அருகே செட்டிகுறிச்சி கிராமத்தில் ரூ 29 லட்சம் மதிப்பில் புதிதாக ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது இந்த கட்டிடத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி புத்தாண்டான இன்று (1. 1. 24) நடைபெற்றது. இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தார். அதே போல அதே ஊராட்சியில் ரூ 28 லட்சம் மதிப்பில் ஸ்மார்ட் அங்கன்வாடி மையக் கட்டிடம் கட்டும் பணிகளுக்கும் அமைச்சர் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். மேலும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் சசிகலா பொன்ராஜ், ஊராட்சி மன்ற தலைவர் பிரபாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர்,
திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.