அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி கெங்கா நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக்(29). டிரைவர் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கார்த்திக் தனது பைக்கை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு தூங்க சென்றுள்ளார். பின்னர் மீண்டும் காலையில் எழுந்து பார்த்தபோது பைக் மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மர்மநபர்கள் பைக்கை திருடி சென்றுள்ளனர். இது குறித்து கார்த்திக் அளித்த புகாரின் அடிப்படையில் பந்தல்குடி போலீசார் நேற்று ஜுலை 31 வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். மேலும் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த பைக்கை திருடி சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.