தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பேட்டி

279பார்த்தது
விதிமுறைகளை மீறி சட்ட விரோதமாக இயங்கும் கல்குவாரிகளை தடை செய்திடவேண்டும்: விவசாயிகள் சங்க மாநிலக்குழு வலியுறுத்தல்



விருதுநகரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் பெ. சண்முகம் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் சாமி. நடராஜன், மாநில பொருளாளர் கே. பி. பெருமாள், மாநில துணைத் தலைவர் டி. ரவீந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


இந்நிலையில் மாநிலத் தலைவர் பெ. சண்முகம் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

ஜல்லிக்கட்டு குறித்து தமிழ்நாடு அரசு இயற்றிய அவசரச் சட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்கிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பால் இனி ஜல்லிக்கட்டை நடத்த எவ்வித தடையும் இல்லை. அதைவிட முக்கியம் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியான பண்பாட்டு பழக்க வழக்கங்கள் இருக்கிறது என்பதை உச்சநீதிமன்றம் வெளிப்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் இந்தியாவினுடைய பன்மைத் தன்மையை வெளிப்படுத்தியிருக்கிறது.


தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தின் கடைசி நாளில் நில ஒருங்கிணைப்புச் சட்டம் 2023 என்ற பெயரில் முழுக்க முழுக்க நீர்நிலைகளை அழிக்கக் கூடிய, கார்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமான சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. அந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், ஏற்கனவே உள்ள நில எடுப்புச் சட்டங்கள் எதுவும் செல்லாது. மாறாக சிறப்புதிட்டங்களுக்காக எந்தஒரு நிலத்தையும் நீர்நிலைகளையோ மற்ற அரசுப் புறம்போக்கோ, தனியாருக்கு சொந்தமான நிலத்தையோ அரசு கையகப்படுத்தி தனியாருக்கு வழங்க முடியும். இச்சட்டம் தமிழ்நாட்டிற்கு விரோதமானது. விவசாயிகளுக்கு எதிரானது. கார்பரேட்டுகளுக்கு சாதகமான ஒரு சட்டத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்றியிருப்பதை கண்டிக்கிறோம். எனவே அச்சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.

மேட்டூர் அணையை திறப்பதை முன் கூட்டியே அறிவித்திட வேண்டும்
. எனவே, இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து எப்போது தண்ணீர் திறக்கப்படும் என்பதை தமிழ்நாடு அரசு முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் விவசாயிகள் தயார் நிலையில் இருக்க உதவியாக இருக்கும். டெல்டா பகுதிகளில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. அதை விரைவுபடுத்தி தூர்வாரும் பணியை முடிக்க வேண்டும்.

வனவிலங்குகளுக்கும் விவசாயிகளுக்குமான மோதல் அதிகரித்து வருகிறது. யானைகள், காட்டெருமைகள், காட்டுப் பன்றிகாட்டுப்பன்றிகளால் பல்லாயிரம் கோடி ரூபாய்களுக்கு பயிர்கள் சேதமாகிறது. குறிப்பாக காட்டுப் பறிகள் அதிகமாக குட்டிகளை போடுகிறது. இதனால், அதிக அளவில் பயிர்களை சேதப்படுத்துகிறது. எனவே காட்டுப்பன்றிகளை அழிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை வேண்டும். அல்லது விவசாயிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும். 1972 இல் சட்டபடியான உரிமை உள்ளது. ஒரு அரசானை வெளியிட்டால் இப்பிரச்சனைக்கு தீர்வு கானமுடியும். மாறாக ஒன்றிய அரசின் மீது பழிபோட்டு வருகிறது தமிழ்நாடு அரசு. பட்டியலில் உள்ளது எனவே அழிக்க முடியாது எனக் கூறுவது சரியல்ல. காட்டுப்ன்றியின் தொல்லையில் இருந்து விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்.

வனவிலங்குகளால் உயிரிழந்தால் ரூ. 5லட்சம் என அரசு அறிவித்துள்ளது. கள்ளச்சாரயாம் குடித்து செத்தவர்களுக்கு 10லட்சம் வழங்கியுள்ளனர். விலங்குகளால் இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க பெரிய பிரச்சனையாக உள்ளது.
சுற்றுசூழலை பாதிக்கும் விதிமுகைளை மீறும் கல்குவாரிகளை தடை செய்திடவேண்டும்,
தமிழ்நாட்டில் சமீபகாலமாக மணலுக்கு பதிலாக எம். சாண்டும், அரசு சாலைகள் அமைக்கவும் அதிகமாக கருங்கல் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் எந்தவித ஆய்வும் இல்லாமல் விதிமுறைகளை மீறி கல்குவாரிகள் அமைக்க அனுமதி வழங்கப்படுகிறது. இதனால் குளங்கள், விளைநிலங்கள், குடிநீர், குடியிருப்புகள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகிறது.
எனவே, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும், விதிமுறைகளை மீறி செயல்படுத்தப்படும் கல்குவாரிகளின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும். என்று தெரிவித்தார். இச்சந்திப்பின்போது சங்கத்தின் மாவட்டத் தலைவர் அ. விஜயமுருகன், மாவட்ட செயலாளர் வி. முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி