அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி அம்பேத்கர் காலனி பகுதியை சேர்ந்தவர் பிரபு(38). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் பிரபு தனது குடும்பத்துடன் ராமேஸ்வரம் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்து சுமார் ஐந்து சவரன் தங்க நகை மற்றும் ரூபாய் ஐம்பதாயிரம் ரொக்க பணம் திருடு போனது தெரிய வந்தது. மர்ம நபர்கள் ஆளில்லாத வீட்டை நோட்டம் பார்த்து நகை மற்றும் பணத்தை திருடி சென்றுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் அருப்புக்கோட்டை அண்ணாமலை நகரில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் பூட்டை உடைத்து 100 சுவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அருப்புக்கோட்டையில் தொடரும் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.