அதிமுகவினருக்கு மாநாடு அழைப்பிதழ் வழங்கிய எஸ்டிபிஐ

53பார்த்தது
அதிமுகவினருக்கு மாநாடு அழைப்பிதழ் வழங்கிய எஸ்டிபிஐ
அருப்புக்கோட்டை தேவா டேக்ஸ் காலனியில் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளரை நேரில் சந்தித்து எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் மதுரை மாநாடு அழைப்பிதழை வழங்கினர்.

மதுரையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் 'வெல்லட்டும் மத சார்பின்மை' என்ற தலைப்பில் மாநாடு நடைபெற உள்ளது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் நேற்று அருப்புக்கோட்டை முன்னாள் ஒன்றிய குழு தலைவரும், தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளருமான யோகா வாசுதேவனை அவரது தேவா டெக்ஸ் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து மாநாட்டில் பங்கேற்பதற்கான அழைப்பிதழை வழங்கினர். அப்போது மாநாடு ஏற்பாடு குறித்து எஸ்பிபிஐ கட்சி நிர்வாகிகளிடம் யோகா வாசுதேவன் கேட்டறிந்தார்.
அப்போது எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த மாவட்ட நகர நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி