சாய்பாபா ஆலயத்தில் சிறப்பு ஆராதனை

80பார்த்தது
அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி அன்பு மாடல் நகர் ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயத்தில் வைகாசி மாத வியாழக்கிழமை முன்னிட்டு சாய்பாபாவிற்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி அன்பு மாடல் நகரில் சுற்றுவட்டாரப் பகுதிகளிலேயே பிரசித்திபெற்ற
ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயம் அமைந்துள்ளது. இந்நிலையில் இன்று ஜுன் 6 வைகாசி மாத வியாழக்கிழமை முன்னிட்டு ஸ்ரீ சீரடி சாய்பாபாவிற்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் தீப, தூபம் காண்பிக்கப்பட்டு மகா ஆரத்தி நடைபெற்றது. இதில் அருப்புக்கோட்டை, பந்தல்குடி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியை சேர்ந்த நூற்றுக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, பக்தி கீர்த்தனைகளை பாடி பாபாவை வழிபட்டு மகிழ்ந்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி