புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை சிறப்பு வழிபாடு

848பார்த்தது
புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை சிறப்பு வழிபாடு
அருப்புக்கோட்டையில் அமுதலிங்கேஸ்வரர் கோவிலில் வரதராஜ பெருமாளுக்கு புரட்டாசி 3 வது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்வரர் கோவிலில் இன்று(7. 10. 23) புரட்டாசி 3 வது சனிக்கிழமையை முன்னிட்டு வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள வரதராஜ பெருமாளுக்கு பால், தயிர், பன்னீர், மஞ்சள், திருமஞ்சனம் உள்பட 11 வகையான அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பு தீபாரதனை நடைபெற்றது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோல் சொக்கலிங்கபுரம் சொக்கநாதர் கோவில் உள்ள பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் கோயில் அலுவலர்கள், கோவில் அறங்காவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். பட்டாபிராமர் கோவிலில் பட்டாபிராமருக்கு புரட்டாசி 3 வது சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி