பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு சூரசம்காரம் நடைபெற்றது

73பார்த்தது
*அருப்புக்கோட்டை அருள்மிகு ஸ்ரீ ஆயிரங்கண் மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு சூரசம்ஹார நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது*

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புளியம்பட்டி அருள்மிகு ஸ்ரீ ஆயிரங்கண் மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பங்குனி பொங்கல் திருவிழாவின் ஒரு பகுதியாக சூரசம்ஹார நிகழ்ச்சி இன்று அதிகாலை நடைபெற்றது. சூரனை வதம் செய்வதற்காக நாள் முழுவதும் அம்மன் தவக்கோலம் இருந்து தன்னுடைய சூலாயுதம் கொண்டு ஆணவமே வடிவான சூரனை அருள்மிகு ஸ்ரீ ஆயிரங்கண் மாரியம்மன் வதம் செய்து பக்தர்களை காத்தருளினார். சூரனை வதம் செய்து தலையை காலடியில் விழ வைத்த அருள்மிகு ஸ்ரீ ஆயிரங்கண் மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த சூரசம்ஹார நிகழ்ச்சியில் புளியம்பட்டி, வேலாயுதபுரம், பாளையம்பட்டி நெசவாளர் காலனி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி