விருதுநகர் மாவட்டத்தில் பசுமை பரப்பளவை அதிகரிக்கும் நோக்கில் பசுமை தமிழ்நாடு இயக்கம் மூலமும், மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக பசுமை விருதுநகர் இயக்கம் மூலமும் பல்வேறு கட்டங்களாக மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, 05.06.2025 அன்று உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு, 11 வட்டாரங்களிலும் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 16.8 சதவீதம் இருக்கும் பசுமை பரப்பினை 33 சதவீதம் ஆக அதிகரிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் 1 கோடி மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், ஜூன்-5 உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு, ஜூன் மாதத்தில் 1 இலட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை, விவசாயத்துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட துறைகளில் உள்ள அரசு அலுவலக கட்டிடங்கள், பஞ்சாயத்து நிலங்கள், நகராட்சி பூங்காக்கள், அரசு மருத்துவமனைகள், விவசாய நிலங்கள் முதலிய பல்வேறு இடங்களில் அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கலாம். மாவட்டத்தில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.