ரூபாய் நோட்டு அலங்காரத்தில் ஜொலித்த சாய்பாபா

4232பார்த்தது
அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி அன்பு மாடல் நகரில் சுற்றுவட்டாரப் பகுதிகளிலேயே பிரசித்தி பெற்ற ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் நேற்று (31. 12. 23) புத்தாண்டை ஒட்டி ஸ்ரீ சீரடி சாய்பாபாவிற்கு ரூ 5, 00, 000 மதிப்பில் புத்தம்புதிய ரூபாய் நோட்டுக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. 500 ரூபாய், 200 ரூபாய், 100 ரூபாய் என புத்தம் புதிய ரூபாய் நோட்டுகள் சாய்பாபா சன்னதி முழுவதும் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து பக்தர்களின் பக்தி கீர்த்தனைகள் பாட ரூபாய் நோட்டுகள் அலங்காரத்தில் ஜொலித்த ஸ்ரீ சீரடி சாய்பாபாவிற்கு தீப தூப ஆராதனை நடைபெற்றது. மேலும் ஆலயத்தில் 2024 தாண்டை கொண்டாடும் விதமாக கேக் வெட்டி பக்தர்கள் அனைவருக்கும் கேக் வழங்கப்பட்டதுடன், சாய்பாபாவின் திருவடியில் வைக்கப்பட்ட நாணயங்களும் பிரசாதமாக வழங்கப்பட்டது. மேலும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக பரத நடன நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த சிறப்பு ஆராதனையில் அருப்புக்கோட்டை பந்தல்குடி, வாழ்வாங்கி, வெம்பூர், சேதுராஜபுரம், செட்டிகுறிச்சி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி