நொங்கு மட்டை கழிவுகளால் விபத்து ஏற்படும் அபாயம்

59பார்த்தது
நொங்கு மட்டை கழிவுகளால் விபத்து ஏற்படும் அபாயம்
அருப்புக்கோட்டை விருதுநகர் சாலையில் சாலையோரம் நொங்கு மட்டை கழிவுகள் குவித்து வைக்கப்பட்டிருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ‌ அருப்புக்கோட்டை விருதுநகர் சாலை வழியாக தினமும் ஏராளமான இருசக்கர வாகனங்கள் கார்கள் வேன்கள் லாரிகள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் பெரிய புளியம்பட்டி அருகே சாலையோரம் நொங்கு மட்டை கழிவுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த கழிவுகள் அனைத்தும் சிறிது சிறிதாக சரிந்து சாலையில் வந்து விழுகிறது. இதனால் இரவு நேரங்களில் அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த கழிவுகளை அப்புறப்படுத்த தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி