வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

78பார்த்தது
*கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்*

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், பணியின் போது கிராம உதவியாளர்கள் இறந்து விட்டால் அவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கிட வேண்டும், சிபிஎஸ் திட்டத்தில் பணி பார்த்து ஓய்வு பெற்று இறந்து போன கிராம உதவியாளரிடம் பிடித்தம் செய்த தொகையையும் அதற்கான அரசு பங்கிடும் உடனடியாக வழங்க வேண்டும், புதிதாக பணியில் சேரும் ஊழியர்களுக்கு நிரந்தர சிபிஎஸ் எண் வழங்க வேண்டும் மற்றும் கிராம உதவியாளர்களை கிராம பணி தவிர மாற்றுப்பணிக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்ற ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அருப்புக்கோட்டை வட்ட தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அருப்புக்கோட்டை வட்ட கிராம உதவியாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கிராம உதவியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி